சபலென்கா, அல்காரஸ் முன்னேற்றம்: யு.எஸ்., ஓபன் 4வது சுற்றுக்கு

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, ஸ்பெயினின் அல்காரஸ் உள்ளிட்டோர் முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், உலகின் ‘நம்பர்-1’ பெலாரசின் சபலென்கா, உஸ்பெகிஸ்தானின் கமில்லா ரகிமோவா மோதினர். ‘நடப்பு சாம்பியன்’ சபலென்கா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 1-6, 6-4, 6-3 என, கனடாவின் லெய்லாவை வீழ்த்தினார். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 3-6, 6-2, 3-6 என ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவிடம் தோல்வியடைந்தார். இத்தாலியின் ஜாஸ்மின் பாவேலினி 3-6, 3-6 என, ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவிடம் வீழ்ந்தார்.

மற்ற 3வது சுற்று போட்டிகளில் உக்ரைனின் மார்டா கோஸ்டியுக், அமெரிக்காவின் எம்மா நவரோ, டெய்லர் டவுன்சென்ட், செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

அல்காரஸ் அபாரம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், சீனாவின் இபிங் வு மோதினர். இதில் அல்காரஸ் 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7-6, 6-7, 6-3, 6-4 என்ற கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை தோற்கடித்தார்.

மற்ற 3வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் டாமி பால், பிரான்சிஸ் டியாபோ, கிரீசின் ஸ்டெபானே சிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் வெற்றி பெற்றனர்.

வில்லியம்ஸ் ஜோடி தோல்வி

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் ஜோடி 3-6, 7-6, 7-10 என, சீனதைபேயின் ஹவோ-சிங் சான், ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

பாலாஜி ஜோடி அசத்தல்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, அமெரிக்காவின் இவான் கிங் ஜோடி 3-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் சான்டர் அரென்ட்ஸ், டேவிட் பெல் ஜோடியை வீழ்த்தியது.

Source link