”சமூக நீதிக்கான பாதையைக் காட்டியவர்” – ஒன்றிய அமைச்சர் அமித்ஷா புகழஞ்சலி

மகாகவி பாரதியாரின் 105 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தனது 11 வயது முதல் கவிதை எழுதி வந்த பாரதி, நாட்டின் விடுதலைக்காக பல்வேறு புரட்சிகர கவிதைகளை எழுதியுள்ளார். இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்.  

1882 ஆண்டு திருநெல்வேலியில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்த இவர், தனது 39 வது வயதில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று உயிர் இழந்தார். இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 அன்று பாரதியார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.   

அந்த வகையில் தற்போது 105வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மகாகவி பாரதியாருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ”நவீனத் தமிழ் இலக்கியத்தின் தந்தையான பாரதி அவர்கள், தனது தேசியவாத கவிதைகள் மூலம் நமது விடுதலை இயக்கத்தில் ஒரு புது விதமான தேசபக்தி உணர்வை ஊட்டியவர். மேலும், தனது ஒளிமயமான தொலைநோக்கு பார்வையால், பாலின சமத்துவம், ஆன்மீக ஞானம் மற்றும் சமூக நீதிக்கான பாதையை இந்தியாவிற்குக் காட்டினார். அவரது ஞானம், முன்னேற்றத்தின் சிகரத்தை நோக்கிய நமது பாதையைத் தொடர்ந்து எப்போதும் ஒளிரச் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.   

Source link