சாமியாராகிறார் பிரபல தொழிலதிபர்

பாங்காக் : பணமும் புகழும் மட்டுமே வாழ்க்கையின் முழுமையான நிம்மதியை தந்துவிடாது என்பதை உணர்த்தும் வகையில், தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஒருவர் கோடிக்கணக்கான சொத்துக்களை விட்டுவிட்டு துறவறம் செல்ல முடிவு எடுத்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், 1999ல் தொடங்கப்பட்டது பிரபலமான ‘ஹாவெல்ஸ்’ ஐஸ்கிரீம் நிறுவனம்.

அதன் நிறுவனர் சிரிபோங் அக்காரஸ்ரியுக் தான் பல ஆண்டுகளாக கட்டியெழுப்பிய, 47 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை மொத்தமாக விற்றுவிட்டு, காட்டில் துறவியாக வாழப்போகும் விசித்திர முடிவை எடுத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் இந்த விற்பனை அறிவிப்பையும் சிரிபோங் வெளியிட்டுள்ளார். ‘ஹாவெல்ஸ்’ நிறுவனம் தாய்லாந்தில் பிரபலமானது என்றாலும் தன் நீண்ட நாள் ஆன்மிக கனவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக சிரிபோங் தெரிவித்துள்ளார்.

Source link