பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமானசாலமன்பாப்பையா(வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11.09.2026) காலமானார். இவரது மறைவுக்குப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்சாலமன்பாப்பையாஉடலுக்குத்தமிழக அரசு சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழுக்காகவே வாழ்ந்து, தன்னுடைய கடைசி உயிர் மூச்சுஉள்ளவரைத்தமிழுக்காகச்சேவை செய்து மறைந்தசாலமன்பாப்பையாவின்இழப்பு தமிழுக்கு மட்டுமல்ல, மதுரைக்கும் பேரிழப்பாகும். ஏனென்றால், மதுரை மண்ணைச் சேர்ந்தவர். கடைசி வரை தமிழுக்காக வாழ்ந்தவர். கண்டிப்பாக அவருடைய இழப்பு பேரிழப்புதான். தமிழக அரசு சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, முதலமைச்சருடைய உத்தரவின் பேரில் அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி மரியாதை செய்வது தொடர்பாகப் பேசி, கண்டிப்பாக அதுகுறித்து தெரிவிக்கிறேன். அவருடைய இழப்பு பெரிய இழப்பு; தமிழுக்கும் பெரிய இழப்பு. கடைசி வரை கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளைத் தாங்கி நிற்கும் அளவுக்கு அவருடைய அனுபவமும், அவருடைய தொண்டும் இருந்திருக்கிறது. இந்த மாதிரியான அனுபவமும் தொண்டும் வேறு யாருக்கும் இருக்காது. கண்டிப்பாக இது பெரிய இழப்பு” எனத் தெரிவித்தார்.