சிட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் சாம்சனோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மேடிசன் கீஸ் முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய சாம்சனோவா அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இதேபோல், அமெரிக்காவின் சோபியா கெனின் 0-6, 5-7 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான எம்மா நவோராவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

இரண்டாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.

Source link