கேரவனில் தனிமை, பச்சை குத்தியதை காட்ட சட்டையை கழற்றிய உதவி இயக்குனர்: அதிர்ச்சி சம்பவம் சொன்ன காஜல் அகர்வால்

தென்னிந்திய திரையுலகில் கடந்த இருபது ஆண்டுகளாக ரசிகர்களின் பேராதரவை பெற்று முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்துள்ள அவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான ரசிகர் சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

ஏ.பி.பி. நியூஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய காஜல் அகர்வால், படப்பிடிப்பு முடிந்து தனது காரவனில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “சில நாட்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், நான் காரவனில் தனியாக ஓய்வெடுத்து கொண்டிருந்தேன். அப்போது அந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவர் எந்த அனுமதியும் இல்லாமல் திடீரென காரவனுக்குள் வந்தார். உடனே தனது சட்டையை கழற்றி, மார்பில் என் பெயரை பச்சைக் குத்தியிருப்பதை காட்டினார். 

அந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது. என் கை, கால்கள் கூட நடுங்க ஆரம்பித்துவிட்டன என்று அந்த நபர் தனது மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடாகவே பச்சைக் குத்தியிருப்பதை புரிந்துகொண்டதாக காஜல் தெரிவித்தார். இருப்பினும், ஒரு பெண் தனியாக இருக்கும் இடத்திற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று அவர் வலியுறுத்தினார்.

என் பெயரை உடலில் பச்சைக் குத்தியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ஒரு பெண் தனியாக இருக்கும் நேரத்தில் அனுமதி இல்லாமல் உள்ளே வருவது முற்றிலும் தவறான செயல். எவ்வளவு பெரிய ரசிகராக இருந்தாலும் இப்படிப்பட்ட நடத்தையை ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்கள் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்து, அவரை அங்கிருந்து வெளியே அனுப்பினேன்,” என்றார்.

திரையுலக அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசும் காஜல் அகர்வால், இதற்கு முன்பு சுபாங்கர் மிஸ்ராவுக்கு அளித்த பேட்டியிலும் பாலிவுட் படங்களை விட தென்னிந்திய படங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததற்கான காரணத்தை விளக்கியிருந்தார். தென்னிந்தியாவில் எனக்கு கிடைத்த கதாபாத்திரங்களின் தரம், பாலிவுட்டில் கிடைக்கவில்லை. எனக்கு தரமான கதாபாத்திரங்களே முக்கியம். எண்ணிக்கையை விட தரத்திற்கே நான் முன்னுரிமை கொடுத்தேன். 

தென்னிந்தியாவில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால், சாதாரண கதாபாத்திரங்களுக்காக பாலிவுட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் எனக்குத் தோன்றவில்லை. மொழி எனக்கு ஒரு தடையாக இருந்ததில்லை. திரைப்படக் கலையை நான் மிகவும் நேசிக்கிறேன். ஏழு படங்களுக்குப் பிறகுதான் நடிப்பின் மீது உண்மையான காதல் ஏற்பட்டது. அதன் பிறகு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன்,” என்று அவர் கூறினார்.

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகின் பணிச்சூழலை ஒப்பிட்டுப் பேசிய காஜல், நேரம் தவறாமல் செயல்படுவதில் இந்தி திரையுலகம் தென்னிந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். “பாலிவுட்டில் திட்டமிட்ட நேரத்தில் எதுவும் நடப்பதில்லை. ஆனால் தென்னிந்தியாவில் கடிகாரத்தைப் பார்த்தே வேலை செய்வார்கள். நான் எப்போதும் நேரத்திற்கு செல்வதற்கு பழகியவள். அதையே விரும்புகிறேன். இந்தி படங்களில் நேர ஒழுங்கு குறைவாக இருப்பதை உணர்ந்தேன்,” என்றார்.

ஒரு படப்பிடிப்பில் அதிக நேரம் காத்திருக்க வைத்த நடிகர் யார் என்ற கேள்விக்கு காஜல் அகர்வால், சல்மான் கான் பெயரை குறிப்பிட்டார். என்னை அதிக நேரம் காத்திருக்க வைத்தவர் சல்மான் கான். அந்த அனுபவம் எனக்கு புதிதாக இருந்தது. அவர் பல நேரங்களில் மதியம் அல்லது மாலையில்தான் படப்பிடிப்புக்கு வருவார். அதுவரை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்து நேரத்தை கழிப்பேன். தென்னிந்திய சினிமாவின் நேர்த்தியும் ஒழுக்கமும் எனக்கு மிகவும் பழக்கமானவை,” என்று தெரிவித்தார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கான கதாபாத்திரங்களில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் காஜல் கூறினார். பாலிவுட்டைப் போல சுதந்திரமான சிந்தனையுடன் பெண்களுக்கான கதாபாத்திரங்களையும், வளர்ச்சியை மையமாகக் கொண்ட கதைகளையும் தென்னிந்திய சினிமா இப்போது அதிகமாக எழுதத் தொடங்கியுள்ளது. முன்பு இருந்த சில தேவையற்ற காட்சிகளுக்கான ஆர்வம் தற்போது குறைந்துள்ளது. நான் எப்போதும் எனக்கான எல்லையை நிர்ணயித்தே இருந்தேன். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்ததில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

காஜல் அகர்வால் அடுத்ததாக இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணம் – பாகம் 1’ திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Source link