சினிமா மாறிப்போச்சு, ஆனா இந்த இடம் பாக்யராஜ்க்கு மட்டும் தான்; மணிவண்ணன் மாதிரி எனக்கு வெற்றி கிடைக்கல: விக்ரமன் வருத்தம்

சினிமா எவ்வளவு தான் டெக்னாலஜி மாறி இருந்தாலும் இந்த ஒரு இடம் பாக்யராஜூவுக்கு மட்டும் தான். இந்திய சினிமாவில் இந்த சாதனையை படைத்தவது அவர் ஒருவர் மட்டும் தான் என்று இயக்குனர் விக்ரமன் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் பல ஃபீல்குட் படங்களை கொடுத்து வெற்றி கண்டவர் விக்ரமன். புதிய பாதை படத்தில் பார்த்திபனிடம் உதவியாளராக இருந்து 1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு, கோகுலம், பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப்போல, உன்னை நினைத்து என பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் கடைசியாக, 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கியிருந்தார். 

கடந்த 12 ஆண்டுகளாக சினிமா இயக்காமல் இருந்து வரும் விக்ரமன், இவ்வப்போது யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது திரையுலக அனுபவம் மற்றும் பாக்யராஜ், மணிவண்ணன் ஆகிய இயக்குனர்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக இந்த நேர்காணலில், தான் படங்களில் வைத்த வித்தியாசமான காட்சிகள் குறித்து இதுவரை யாருமே பாராட்டவில்லை என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து பேசிய அவர், எனது படத்தில் பல புதுமையாக காட்சிகள் இருக்கும். ஆனால் அதை யாரும் பாராட்டியதே இல்லை. எடுத்துக்காட்டாக, முதல் படமான புது வசந்தம் படத்தில் பட்ஜெட் போடுவது, பாடல் பாட போய விளம்பரத்தில் வாய்ஸ் கொடுப்பது, கிருஷ்ணர் போலவே, யோசுக்கு காலடி தடம் அமைத்து வீட்டுக்கு அழைப்பது, சர்ச்சில் ஐயர்கள் மந்திரம் சொல்வது போன்ந காட்சிகள் வைத்தேன். அதேபோல் பிரியமான தோழி படத்தில் கிறிஸ்துவர் கேரக்டரான மணிவண்ணன் வீட்டில் ஐயப்ப பூஜை நடக்கும். தமிழில் இதை யாருமே பாராட்டவில்லை. 

அதே சமயம் பிரியமான தோழி படத்தை தெலுங்கில் எடுக்கும்போது அந்த சீனை தெலுங்கில் அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டி எழுதி இருந்தார்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பாக்யராஜ் குறித்து பேசிய அவர், திரைப்படங்கள் எவ்வளவோ மாறிவிட்டது. பல புதுமைகள் வந்துவிட்டது, பிளாக் அண்ட் வெயிட் இருந்து கலர் இன்றைக்கு க்யூப் வரை மாறி இருந்தாலும் இந்தியா முழுவதும் ஸ்கிரீன் ப்ளே என்று எடுத்துக்கொண்டால் அது பாக்யராஜ் சார் ஒருவர் தான். அவருக்கு பின் யாருமே இல்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல் மணிவண்ணன் சார் அனைத்து ஜானர்களிலும் படம் எடுத்துள்ளார். ஆனால் இவரை போல் முயற்சி செய்து நான் தோற்றுவிட்டேன். எனது பெரும்புள்ளி, புதிய மன்னர்கள் தோல்வியை தழுவியது என கூறியுள்ளார்.

Source link