பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில் ஆளும் லேபர் கட்சியைச் சேர்ந்த மூன்று இந்திய வம்சாவளி எம்.பி-க்கள் மிக முக்கிய அரசாங்கப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட உமா குமாரன் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பிரிட்டனின் முன்வரிசை அமைச்சரவையில் இரண்டு இந்து மற்றும் இரண்டு சீக்கிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சொந்த நாடே வேண்டாம்… ஐரோப்பாவை விட்டு தலை தெறிக்க ஓடும் மக்கள்; காரணம் இதுதான்
அதேவேளையில், முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு நெருக்கமாக இருந்த சீமா மல்ஹோத்ரா மற்றும் பிரீத் கவுர் கில் ஆகிய இரு மூத்த இந்திய வம்சாவளி எம்.பி-க்கள் பின்வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொல்கத்தாவைப் பூர்வீகமாகக் கொண்ட லீசா நந்தி தனது கலாச்சாரத் துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
கனிஷ்கா நாராயண் – ஏ.ஐ துறை அமைச்சர்
பீகாரின் முசாபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாராயண், தனது 12-வது வயதில் குடும்பத்துடன் வேல்ஸுக்குச் சென்றார். ஈட்டன் கல்லூரி, ஆக்சுஃபோர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்றவர். கடந்த 2024 ஜூலையில் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஜூலை 20, 2026 அன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஏ.ஐ துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சத்வீர் கவுர் – சமத்துவத் துறை அமைச்சர்
பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட சத்வீர் கவுர், சவுத்தாம்ப்டனில் பிறந்து வளர்ந்தவர். இவரது பெற்றோர் அங்குப் புடவைக் கடை நடத்தி வந்தனர். சத்வீர் கவுர் வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் அமைச்சகத்தின் சமத்துவத் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் உள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பாலினச் சமத்துவம் ஆகிய முக்கியப் பொறுப்புகளை இவர் கவனிப்பார்.
ஹர்ப்ரீத் உப்பால் – உதவி விப் (Assistant Whip)
ஹடர்ஸ்ஃபீல்ட் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹர்ப்ரீத் உப்பால், ஜூலை 2024-ல் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் (Assistant Whip). நாடாளுமன்றத்தில் கட்சியின் முடிவுகளுக்கு ஏற்ப எம்.பி-க்களை வாக்களிக்க வைப்பது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது இவரது முக்கிய வேலையாகும்.
