சிறுமிக்கு பாலியல் தொல்லை: பேக்கரி உரிமையாளர் போக்சோவில் கைது

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேக்கரி உரிமையாளர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 54). இவர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக ‘ஐயங்கார் பேக்கரி’ என்ற பெயரில் கடை நடத்தி வந்துள்ளார். இதற்காக அந்த பகுதியிலேயே வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வந்தார்.

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

இந்த நிலையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியைத் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை நேரில் கண்ட சிறுமியின் தாய், குமாரை தட்டிக்கேட்டு, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணைக்குப் பின் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source link