இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை (ITBP) தலைமை இயக்குநர் சத்ருஜீத் சிங் கபூர் தெரிவித்த கருத்துகளுக்கு, வெளியுறவு அமைச்சகம் (MEA) வெள்ளிக்கிழமை பதிலளித்தது. மேலும், அதன் குறிப்பிட்ட விவரங்கள் குறித்த கேள்விகளைப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்குமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
“நாங்கள் கடந்த காலங்களில் குறிப்பிட்டது போல, சீனப் படைகள் தங்களின் வழக்கமான ரோந்துப் பணிகளிலிருந்து விலகிச் செல்லும்போது, இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது நிலைமை சீர்குலைகிறது. நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் தவறான புரிதல்களையும் தவறான கணிப்புகளையும் தவிர்ப்பதற்கும் இரு தரப்பினரும் தற்போதுள்ள தூதரக மற்றும் இராணுவ வழிமுறைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்,” என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.
“சிறந்த எல்லை நிர்வாகத்திற்காக, பொருத்தமான பகுதிகளில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு குறித்த புரிதலை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
“இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிம்மதியையும் பேணுவது அவசியம் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.
