பெய்ஜிங்: கிழக்கு சீனாவின் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு சீனாவில் உள்ள கிங்டாவ் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுக் கொடி கட்டப்பட்ட சரக்குக் கப்பலில் திடீரென தீப்பற்றியுள்ளது.
மளமளவென கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 42 பேர் கப்பலில் இருந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிபத்து குறித்து கடலோரக் காவல்படையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்த சீன பிரதமர் ஜி ஜின்பிங், முழுமையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
