முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ‘தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் – சமூகநீதியில் – மாநில உரிமையில் – தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்’ என தெரிவித்துள்ளார்.
