இன்றைய தினம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி மறுத்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஜோசப் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மூன்று தினங்களுக்கு பிறகு முதல்வர் விஜய்யின் பதிலுரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றைய தினம் துவங்கிய நிலையில், பல பரபரப்பான சம்பவங்கள் நடந்தது. திமுகவை கடுமையாக விமர்சித்து முதல்வர் உரையாற்றிய நிலையில், எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். இதனை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திலே தர்ணாவில் ஈடுபட்டனர். இப்படியான நிலையில் முதல்வர் விஜய்யின் சுறா பட நகைச்சுவை காட்சியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
Source link
