'சூடான' லீ மான்ஸ் கார் பந்தயம்: அஜித் அணிக்கு 38ம் இடம்

லண்டன்: முதல்வர் விஜய் துவக்கி வைக்க… நடிகர் அஜித் காரில் பறக்க, ‘லீ மான்ஸ்’ கோப்பை பந்தயம், தமிழக ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

கார் பந்தய பிரியர்களுக்காக ‘லீ மான்ஸ்’ கோப்பை 2016ல் துவங்கியது. அதிவேக ‘பார்முலா-1’ பந்தயத்தில் இருந்து மாறுபட்டது. ‘பார்முலா-1’ல் ஒற்றை ‘சீட்’ மட்டும் இருக்கும்.

ஆனால், ‘லீ மான்ஸ்’ கோப்பை பந்தயத்தில் ஒரு காரை இரு வீரர்கள் பகிர்ந்துகொண்டு ஓட்ட வேண்டும். வீரர்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கும். கடினமான நீண்ட நேர பந்தயமாக இருக்கும்.

சரியான எரிபொருள், ‘பிட் ஸ்டாப்’ சமயத்தில் காரை விரைவாக சரிசெய்து இயக்குவது, சீரான வேகத்தில் செல்வது போன்றவை வெற்றிக்கு உதவும். எல்.எம்.பி. 3, புரோ, ஜிடி 3 என பல பிரிவுகளில் போட்டிகள் நடக்கும்.

2026 சீசனுக்கான ‘லீ மான்ஸ்’ கோப்பைக்கான பந்தயம் ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ் (2 சர்க்கியூட்), பெல்ஜியத்தில் நான்கு சுற்றுகள் நடந்தன.

ஐந்தாவது சுற்று பிரிட்டனின் பிரபலமான சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்கியுட்டில் நடந்தது. இதை தமிழக முதல்வர் விஜய், கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித், எல்.எம்.பி3 புரோ/ஏ.எம் பிரிவில் பங்கேற்றார். இவருடன் பிரான்சின் ரோமைன் வோஸ்னியாக் இணைந்து காரை ஓட்டினார். சுமார் 2 மணி நேரம் பந்தயம் நடந்தது. இதில் அஜித் குழு (ரெட் ஆன்ட்) 38-வது இடத்தில் நிறைவு செய்தது. தொடரின் கடைசி சுற்று, வரும் அக். 10ல் போர்ச்சுகலில் நடக்க உள்ளது.

Source link