சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு; வீரமணியின் டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமி

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி உள்பட 8 போரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை காரில் அழைத்து சென்றதாக வீரமணியின் டிரைவர்கள் லாசர், பார்த்திபனும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

12 சிறுமிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், வீரமணி மீது 8 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளனர். இதில், 2வது போக்சோ வழக்கில் புழல் சிறையில் அடையாள அணி வகுப்பு நடந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியை மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறைக்கு அழைத்து சென்று கைதிகளின் அடையாள காட்டச் செய்தனர். அப்போது, வீரமணியிடம் தன்னை அழைத்து சென்ற லாசர், பார்த்திபனை சிறுமி சரியாக அடையாளம் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

Source link