திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் பலரும் கோவிலுக்கு காணிக்கை, நன்கொடை வழங்கி வருகின்றனர்.
ரூ. 1 கோடி நன்கொடை
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபரும், ஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான திருமலா குமார் கனகமெடலா ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கோவிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை அவர் வழங்கினார்.
