செங்கோட்டையன் ஜெயிச்சது செல்லாதாம்.. கோர்ட்டுக்குப் போன அதிமுக புள்ளி! ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றஅவர், தற்போது வருவாய் துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக வேட்பாளர் பிரபு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்பு மனுவை ஏற்றதே தவறு எனவும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக ஒத்திவத்து இருந்தார். இதற்கிடையே இன்று, இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.