செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.10.206) இரவு தங்களது 7 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் உறங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை (12.10.2026) அவர்கள் எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
அதோடு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுனர். அதே சமயம் சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுனர். மேலும் கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் மொத்த தனிப்படைகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் சிறுமி காணாமல் சென்று. இன்றுடன் (20.10.2026) ஒன்பது நாட்கள் ஆகியும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அதாவது இந்த வழக்கில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மூன்று காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதோடு கிராமத்தில் உள்ள நீர்நிலைகள், கரும்புத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் காவல்துறையினர் தீவிர தேடுதல் சோதனை நடத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் பதிவான தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை இந்த வழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அதிரடி திருப்பமாக இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
