திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்தச் சோதனை இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.
எங்கெல்லாம் நடக்கிறது?
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு,
செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியின் மூர்த்திபாளையத்தில் உள்ள வீடு,
கரூர் கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வீடு,

கரூர் கோதை நகரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்திக் என்பவரின் வீடு
கரூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம்
ஆகிய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இந்தச் சோதனையில் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்தில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் கட்சி மாறி வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசியதாக புகார் பதிவானது.
அந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
