சென்னையில் பருவமழையை சமாளிக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்- அதிகாரிகள் தகவல்

Summary

தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் பருவமழை முன் எச்சரிக்கையாக எந்தெந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கும் என்பதை கண்டறிந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் மழை நீர் தேங்கி நிற்கும் பகுதியில் மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்கு முன் எச்சரிக்கையாக சுமார் 90 மோட்டார்கள் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம். பருவமழை முன் எச்சரிக்கையாக தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்கு சுமார் 90 மோட்டார்கள் மற்றும் ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன.

எனவே தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

Source link