சென்னையில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்! அரசு பேருந்து ஓட்டுநரை ஆட்டோ டிரைவர் தாக்கியதால் பரபரப்பு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அரசு மாநகரப் பேருந்து ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலையில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சக பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் பேருந்துகளை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.