தமிழ்நாடு சட்டமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.
டிஸ்னி படத்துல வர்ற மாதிரி 732 அரண்மனைகள்; பேய் நகரமாக மாறிய திட்டம்: துருக்கியில் காலியாக கிடப்பது ஏன்?
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது, தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்கனவே 6-02-2006 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்துவதற்கு தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதுகுறித்து மத்திய அரசின் சட்ட அமைச்சர் கடந்த 02-02-2018 அன்று மாநிலங்கள் அவையில் தமிழ்நாட்டின் முன்மொழிவு இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டுள்ளதும் என்றும் கடந்த 16-10-2012 அன்றைய கடிதத்தில் உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த முன்மொழிவை ஏற்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
தற்போது, தொழில்நுட்பம் முன்னேறி உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது என்று இந்த பேரவை கருதுகிறது. எனவே தமிழை சென்னை உயர்நீதி மன்றத்தின் முதன்மையான மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் மற்றும் மனுக்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கான சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சியை ஏற்படுத்த வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம் 1963 பிரிவு 7 ஆகிவற்றின் கீழ் மாநில ஆளுநரால் அனுப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறி தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
