சென்னை தாம்பரத்தில் குற்றாலம்; தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் ஸ்பெஷல்!

நமது நிருபர்

சென்னை தாம்பரத்தில் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில்குற்றால அருவியில் குளிப்பதை போன்று மகிழ்வை தரும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழலாம்.

சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், ‘தினமலர்’ நாளிதழ், சத்யா ஏஜென்சிஸ் இணைந்து வழங்கும், ‘தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ – 2026’ வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று முதல் துவங்கியது. வரும் செப் 14ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மக்களே, 3 நாள் தொடர் விடுமுறையை கொண்டாட நல்ல வாய்ப்பு.

குற்றால அருவி

குற்றால அருவியில் குளிப்பதை போன்று மகிழ்வை தரும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து மகிழலாம். கமகமக்கும் உணவுகளுடன் ‘புட் கோர்ட்’ வரவேற்க காத்திருக்கிறது. மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபால், பிங்கர் பிஷ், பிஷ் பிரை என வகை வகையான உணவுகளை ருசிக்கலாம்.

Source link