சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, அடையாறு, திருவான்மியூர் என 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

சென்னையில் ரவிச்சந்திரன் அலுவலகத்திலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

அரசு டெண்டர்களில் கட்சி நிதி என்ற பெயரில் சட்டவிரோதமாக நடந்த வசூல் தொடர்பாக சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

Source link