ஜீவாவின் அடுத்த படம்; கோலாகலமாக நடைபெற்ற தொடக்க விழா

கடந்த பொங்கலுக்கு வெளியான ’தலைவர் தம்பி தலைமையில்’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கு, முன்பாக சில படங்கள் ஜீவாவிற்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும்,  இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றிப்படமாக மாறியது. இதற்கடுத்து, ஜீவாவின் நடிப்பில்  ராஜேஷ் இயக்கத்தில் ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனும் படம் வெளியாக இருக்கிறது.   

இந்நிலையில், ஜீவாவின் அடுத்த படத்திற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ’கிடா’ படத்தை இயக்கிய வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ’தகப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். ’கருடன்’ மற்றும் ’மாமன்’ போன்ற படங்களைத் தயாரித்த ’லார்க் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.    

இது குறித்து ஜீவா வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், கருப்பண்ணசாமி அருளால் தொடங்கும் ‘தகப்பன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  இப்படம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Source link