சட்டப்பேரவையில் பேசி ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தாஹிரா, “ராணிப்பேட்டையில் உள்ள ஜே.கே டயர்ஸ் ஆலையை இரவு எல்லாம் எரிய விடுவதால் பகலில் சுற்றுச் சூழல் அதிகமாக பாதிக்கப்படுகிறது. அங்கு இருக்கும் மக்களும் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஆனால், போன ஆட்சியில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கண்டிப்பாக நம் ஆட்சியில் அந்த கம்பெனியை இழுத்து மூட வேண்டும். அது நமக்கு தேவையில்லை” என்றார்.
நீங்க ட்ரெண்டுல இருக்கீங்களா? அப்ப 2026 டாப் நாடு பத்தி தெரியுமா? இந்த டெஸ்டினேஷன் தான் அது
தொடந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “ஜே.கே டயரை மூட வேண்டும் என்று எம்.எல்.ஏ கூறியிருந்தார். நாம் கண்டிப்பாக இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். எல்லா கம்பெனிகளும் இங்கு இருக்க வேண்டும். அதே நேரத்தில் சுற்று சூழல் பாதுகாப்பு இருக்கும்படியான நடவடிக்கைகள் எடுத்து அவர்களுக்கான சட்டத் திருத்தங்கள் கொடுத்து கண்டிப்பாக அந்த கம்பெனி தமிழ்நாட்டில் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
த.வெ.க எம்.எல்.ஏ தாஹிராவை தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கடுமையாக சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “இந்த த.வெ.க எம்.எல்.ஏ-க்களுக்கு என்னதான் ஆச்சு? ஜே.கே டயர் நிறுவனத்தையே மூட வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒருவேளை மாசு அல்லது சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால், அதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து அதைச் சரிசெய்ய வைக்க வேண்டும்.
And now this TVK MLA wants to Shut down @JKTyreCorporate 🤦🏾🤦🏾🤦🏾
WHAT is wrong with these people ! If there is pollution issues then take action and rectify it ! Calling for an outright shutdown is madness and sends out a very poor signal to #Industry circles !
Am absolutely… https://t.co/q1cyL5NzqP
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 3, 2026
அதை விட்டுவிட்டு, மொத்தமாகத் தொழிற்சாலையையே மூடச் சொல்வது முற்றிலும் முட்டாள்தனமானது. இது முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் உலகிற்கு மிகவும் தவறான சிக்னலை அனுப்பிவிடும். இதுபோன்ற முதிர்ச்சியற்ற மற்றும் அறிவற்ற பேச்சுக்களால், நமது தமிழ்நாட்டின் தொழில்முறை வளர்ச்சி பாழாக்கப்படுவதைப் பார்த்து நான் மிகவும் மனவேதனை அடைகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
