டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே பணி.. செப்டம்பர் 19 ல் இண்டர்வியூ

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பைத்தான் புரோடக்‌ஷன் சப்போர்ட் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

டிசிஎஸ் ஐடிநிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Python Production Support ரோலுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணியை விரும்புவோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றிய விவரம் பின்வருமாறு: முதலாவது இந்த பணியை பெற விரும்புவோர் பிளஸ் 2 முடித்து ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

ஸ்கிரிப்ட்டிங் லேங்குவேஜ்களான பைத்தான், Perl, Unix, Shell உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். எஸ்க்யூஎல்லில் 4+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Splunk மற்றும் APM டூல்ஸ் உள்ளிட்டவற்றில் 2+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். லினக்ஸ் கமெண்ட்டில் 2+ ஆண்டுகள் அனுபவம்கொண்டிருக்க வேண்டும். ஐடிஐஎல், மைக்ரோசர்வீசஸ் உள்ளிட்டவற்றில் கண்டிப்பாக அனுபவம் இருக்க வேண்டும்.

இதுதவிர மானிட்டரிங் டூ்ல்ஸ்களான Dynatrace, Splunk உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருப்பதோடு, Autosys, ITIL Process உள்ளிட்டவற்றிலும் அனுபவம் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 19 ம்தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Gate 04, TCS Siruseri Campus, Plot No.1, G-1, SIPCOT Information Technology Park Near Siruseri Special Economic Zone (SEZ), Navalur Post, Siruseri, Chennai -603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யபட உள்ளனர். இண்டர்வியூவிற்கு செல்வோர் குறைந்தபட்சம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ரெஸ்யூம், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, அரசு அடையாள அட்டையின் 2 நகல்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். லேப்டாப் உள்பட பிற எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here