புதுடில்லி: நீதித்துறையை சேர்ந்த, எட்டு அதிகாரிகளை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரையை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏற்றுக் கொண்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் கொலீஜியம் நடந்தது. நீதித்துறை அதிகாரிகளான குர்விந்தர் பால் சிங், நிவேதிதா அனில் சர்மா, நிஷா சகாய் சக்சேனா, சஞ்சய் சர்மா-, பாரத் பராஷர், அதிதி சவுத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆகிய எட்டு பேரையும், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரைக்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதியாக, நீதித்துறை அதிகாரி யாஷ் பால் போர்னியை நியமிக்கவும், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மனோஜ் பிரசாத், அகில் குமார் மற்றும் ராம் சர்மா ஆகியோரையும், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உஷாராணி, கே.எஸ். பரத்குமார் மற்றும் நெரலே வீரபத்ரையா பவானி ஆகியோரை நியமிக்கும் பரிந்துரைக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
