இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமான டி.சி திரைப்படத்தில் வாமிகா கப்பியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், படத்தின் முக்கியக் குழுவினருக்கு புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ (BMW) கார்களை பரிசாக வழங்கினார். ஆனால், இந்த பாராட்டு நிகழ்வில் நடிகை வாமிகா கப்பி இடம்பெறாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான டி.சி திரைப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமானார். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவான இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன், உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. பின்னர் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி, மேலும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைந்தது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருக்கு புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார்களை பரிசாக வழங்கினார். இந்த பாராட்டு நிகழ்வின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது. அந்த வீடியோவில், மூவரும் தங்களுக்கான புதிய கார்களின் சாவிகளைப் பெற்றுக்கொள்வது இடம்பெற்றிருந்தது.
There was no mention of #Wamika at all… not even a passing one, despite her being the soul of the film DC. She, too, deserved a car and due acknowledgment. https://t.co/5bPRT7ZSte
— Subhakeerthana (@bhakisundar) September 10, 2026
அந்தப் பதிவில், பிளாக்பஸ்டர் டிசி திரைப்படத்தின் வெற்றிக்காக கலாநிதி மாறன், அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோரைப் பாராட்டி, புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார்களின் சாவிகளை வழங்கினார் என சன் பிக்சர்ஸ் குறிப்பிட்டிருந்தது. திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்ததை கொண்டாடும் வகையிலும், இயக்குநர், கதாநாயகன் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
Mr. Kalanithi Maran congratulated and presented the keys to brand-new BMW cars to Arun Matheswaran, Lokesh Kanagaraj and Anirudh, for the success of Blockbuster #DC! 💥@Dir_Lokesh@ArunMatheswaran@anirudhofficial#DCMegaBlockbusterpic.twitter.com/QOgmCA6ZqI
— Sun Pictures (@sunpictures) September 10, 2026
பி.எம்.டபிள்யூ கார்கள் வழங்கப்பட்டதைப் பார்த்து பல ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், சிலர் நடிகை வாமிகா கப்பி ஏன் இந்த பாராட்டு நிகழ்வில் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பினர். டிசி படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தவர் வாமிகா கப்பி. திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், அவர் பாராட்டு நிகழ்வில் இடம்பெறாதது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. ஒரு ரசிகர், வாமிகாவுக்கு கார் இல்லையா? இப்போது உண்மையாகத்தான் கேட்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். மற்றொரு ரசிகர், வெற்றிப் படங்களின் பின்னர் கார்கள் பரிசாக வழங்கப்படும் நடைமுறை குறித்தும், அதில் வாமிகா கப்பி இடம்பெறாதது குறித்தும் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
அவர், ஒரு கேள்வி தென்னிந்தியாவில் திரைப்பட வெற்றிக்குப் பிறகு கார் பரிசளிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. இப்படி தொடர்ந்து பரிசாக கிடைக்கும் இத்தனை கார்களை அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதைவிட, வாமிகா கப்பி-க்கு கார் வழங்கப்படாதது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அவர்தான் இந்தப் படத்தின் ஆன்மா” என பதிவிட்டார்.
மற்றொரு ரசிகர், வாமிகா குறித்து ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை. படத்தின் ஆன்மாவாக இருந்த அவருக்கு குறைந்தபட்சம் ஒரு அங்கீகாரம்கூட வழங்கப்படவில்லை. அவருக்கும் ஒரு கார் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறினார். இந்த விவாதம் ரெட்டிட் தளத்திலும் தொடர்ந்தது. அங்கு ரசிகர்கள் பலரும் படத்தில் வாமிகா கப்பியின் பங்களிப்பு குறித்து கருத்துகளைப் பகிர்ந்தனர்.
ஒரு ரசிகர், அவரது திரை இருப்பும், கதாபாத்திரமும் அல்லது அதை எப்படி அழைத்தாலும் சரி, படத்தின் பெரும்பாலான பகுதிகள் சிறப்பாகச் செயல்பட அவர்தான் முக்கிய காரணமாக இருந்தார். இயக்குநருக்கு மட்டும் கார் வழங்கியிருந்தால் எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் இயக்குநர், நடிகர் மற்றும் உங்களது வருங்கால மருமகன் என மூவருக்கும் வழங்குகிறீர்கள் என்றால், அவருக்கும் அதே அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
மற்றொருவர், என்னைப் பொறுத்தவரை, படத்தின் சிறந்த அம்சமே அவர்தான் எனக் கூறினார். மேலும் ஒருவர், மறந்துவிட்டீர்களா? இது கோலிவுட்; இங்கு பெண்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை” என விமர்சித்தார். மற்றொரு ரசிகர், இந்தப் படத்தில் லோகியை நான் பார்த்ததே இல்லை. அவர் இருந்தாரா? எனக்கு இந்தப் படத்தை முழுவதுமாகத் தாங்கிச் சென்றவர் வாமிகாதான் என தெரிவித்தார்.
அதேநேரத்தில், வாமிகா கப்பி இந்த பாராட்டு நிகழ்வில் இடம்பெறாததற்கு சில ரசிகர்கள் வேறு விதமான விளக்கங்களையும் முன்வைத்தனர். ஒரு ரசிகர் கூறுகையில், “லோகேஷ் இந்த நேரத்தைப் பயன்படுத்தி மற்றொரு படத்தை உருவாக்கியிருந்தால் ரூ.50 கோடி வரை சம்பாதித்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக குறைந்த சம்பளத்தை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தை உருவாக்குவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் தனது நேரத்தை செலவிட்டுள்ளார்.
வாமிகா சிறப்பாக நடித்திருந்தாலும், அவர் வழக்கமான சம்பளத்தையே பெற்றிருக்க வாய்ப்புள்ளது. அனிருத்துக்கும் இதே நிலைதான். லோகேஷுடன் நட்பு இருப்பதால் அவரும் குறைந்த சம்பளத்தில் பணியாற்றியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
