டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் திடீர் ஏற்றம் வர வாய்ப்பு உள்ளது

நேற்று 24 புள்ளிகள் குறைந்து தொடங்கிய நிப்டி நாள் முழுதுமே சிறுசிறு ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. நாளின் இறுதியில் 10 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ல் 3 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிந்தன.

இவற்றில், ‘நிப்டி மிட்கேப்50’ குறியீடு அதிக பட்சமாக 0.22 சதவீத உயர்வுடனும், ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு அதிக பட்சமாக 1.27 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 3.32 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிக பட்சமாக 1.38 சதவீத இறக்கத்துடனும் முடிவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,407 நிறுவனங்களின் பங்குகளில் 1,160 ஏற்றத்துடனும்; 2,133 இறக்கத்துடனும்; 114 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி தற்போது சிறிய ஏற்றத்துடன் கூடிய கன்சாலிடேஷன் நகர்வில் தொடர்கிறது. நிப்டி இச்சிமோகு கிளவுடுக்கு மேலே நிறைவடைந்ததுடன், 50 நாள் இ.எம்.ஏ.,வை ஒட்டியும் வர்த்தகமாகி வருகிறது. மொமென்டம் இண்டிக்கேடர்கள் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளன.

Image 1603465

ஆர்.எஸ்.ஐ., 49.22 என்ற நடுநிலை அளவிலும், ஸ்டோக்காஸ்ட்டிக் ஆசிலேட்டர் வாங்கும் வேகம் சற்று மேம்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுகிறது. அதே நேரத்தில், எம்.ஏ.சி.டி., இன்னும் முழுமையாக ஏற்றத்திற்கான சமிக்ஞைகளை வழங்கவில்லை என்பதால், வலுவான டிரெண்டு இன்னும் உருவாகவில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.

தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 24,025-24,120ல் உடனடி ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. இந்த லெவலுக்கு மேல் நிப்டி உறுதியாக நிலைத்தால், 24,350 வரை மேலே செல்லும் வாய்ப்பு உருவாகலாம். இறக்கம் வந்தால், 23,900ல் உடனடி சப்போர்ட் உள்ளது. அதற்கு கீழே 23,800 மற்றும் 23,600 லெவல்களே அடுத்த முக்கிய சப்போர்ட்டாக இருக்கும்.

எனவே, தெளிவான பிரேக்-அவுட் ஏற்பட்டு 24,120க்கு மேல் நிப்டி நிறைவடைந்தால் மட்டுமே தற்போதைய கன்சாலிடேஷன் முடிவுக்கு வந்து புதிய ஏற்ற டிரெண்டு உறுதியாகும் எனலாம். அதுவரை பக்கவாட்டு நகர்வே தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Source link