தங்கம் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிரடியாக சரிந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாகக் குறைந்து நடுத்தர மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

முன்னதாக, சில நாட்கள் விலை சரிவைச் சந்தித்த தங்கம், நேற்று முன்தினம் அதிரடி ஏற்றம் கண்டது. அன்று சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், கிராம் ரூ.14,240-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. நேற்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சட்டென்று சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராமுக்கு ரூ.170 சரிந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,190-க்கு விற்பனையாகி வருகிறது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி அதே நிலையில் நீடிக்கிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் இந்த திடீர் விலை குறைவு ஆபரணம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link