தங்கம் விலை இன்றும் குறைவு; 2 நாட்களில் சவரனுக்கு 1,040 ரூபாய் சரிவு

சென்னை: சென்னையில் இன்று (செப் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (செப் 12) ஆபரண தங்கம், கிராம் 14 ஆயிரத்து 170 ரூபாய்க் கும், சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (செப் 13), தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (செப் 14), தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 360 ரூபாய் சரிவடைந்து, 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (செப் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link