-நமது சிறப்பு நிருபர்-
பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் (வயது 75) இன்று காலமானார். கேன்சர் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். தேவா இசையில் அறிமுகமான இவர், ‘பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ பாடலை பாடியதன் மூலம் பிரபலமானார். தேவா பேவரைட் பாடகராகவும் மாறினார். அவரது இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள கிருஷ்ணராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பிலும் பாடியுள்ளார். மொத்தம் 500க்கு மேல் பாடல்களை பாடியுள்ளார்.
கிருஷ்ணராஜ் மறைவுக்கு திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சென்னை ராமாபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், இறுதி சடங்கு சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள வேம்படி தாளம் கிராமத்தில் நாளை காலை நடக்கிறது. கிருஷ்ணராஜ் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘நாலு நிமிஷம்’ பாடல் தான் இவரது கடைசி பாடல்.
பாடகர் கிருஷ்ணராஜ் பாடிய பாடல்கள் சில
* வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா – காதல் கோட்டை (1996)
* தஞ்சாவூரு மண்ணு எடுத்து – பொற்காலம் (1997)
* கருடா கருடா – நட்புக்காக (1998)
* சின்ன காணாங்குருவி – பொற்காலம் (1997)
* வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி – காதலே நிம்மதி (1998)
* சோக்கு சுந்தரி – மூவேந்தர் (1998)
* ஜனவரி நிலவே – என் உயிர் நீதானே (1998)
* திருப்பதி ஏழுமலை வெங்கடேசா – நினைவிருக்கும் வரை (1999)
* காத்தடிக்குது காத்தடிக்குது – நினைவிருக்கும் வரை (1999)
* ஆயா ஒன்னு அடம்பிடிக்குது – நினைவிருக்கும் வரை (1999)
* எப்பா எப்பா அய்யப்பா – ஏழையின் சிரிப்பில் (2000)
* பஞ்சுமெத்தை கிளியே – இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி (2006)
* அய்யயோ – பருத்திவீரன் (2007)
* ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் – கழுகு (2012)
* நாலு நிமிஷம் – சூரரைப் போற்று (2020)
