டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் சந்திப்பு

புதுடில்லி: 3 நாள் அரசு முறை பயணமாக போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க் நேற்று இந்தியா வந்துள்ளார். 2024ல் பிரதமர் மோடி போலந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, விடுத்த அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளார்.

டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு, பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள், விண்வெளி ஆராய்ச்சி, டிஜிட்டல் துறை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

பிரதமர் உடனான சந்திப்பிற்கு பிறகு, போலந்து நிதியமைச்சர் அஞ்சேய் டொமான்ஸ்கி மற்றும் முன்னணி ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பெங்களூரு செல்கின்றனர். அங்கு தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை தலைவர்களுடன் வர்த்தக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

Source link