கடந்த செப்டம்பர் காலாண்டில் நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளின் நிகர லாபம் கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், டிபாசிட்களை திரட்டுவதற்கான கடும் போட்டி மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு வைப்புநிதி திட்டங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் வட்டி ஆகியவற்றால், வங்கிகளின் நிதி திரட்டும் செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் முதல் மூன்று பெரிய தனியார் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் வரம்பு குறைந்துள்ளது.
முக்கிய விபரங்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டங்களால் வங்கிகளின் வைப்புநிதி வளர்ச்சி பத்தாண்டு உச்சத்தை தொட்டாலும், அதற்கான கூடுதல் வட்டி செலவால் வங்கிகளின் லாப வரம்பு அழுத்தத்தை சந்தித்தது
நிதி திரட்டும் செலவு உயர்ந்ததால் எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் ஆக்சிஸ் ஆகிய மூன்று பெரிய தனியார் வங்கிகளின் நிகர வட்டி வருவாய் வரம்பு குறைந்துள்ளது
ஐ.டி.பி.ஐ., வங்கியின் வட்டி வருவாய் அதிகபட்சமாக 3.71 சதவீதத்திலிருந்து 4.11 சதவீதமாக உயர்ந்த போதிலும், வாராக்கடன் ஒதுக்கீடு காரணமாக அதன் நிகர லாபம் 39 சதவீதம் சரிந்தது.
