நியூ மெக்சிகோ இனி ” நியூ அமெரிக்கா” வா? – அமெரிக்காவில் வெடித்த புது பெயர் மாற்றம் சர்ச்சை!

ஆனால், ஒரு நாட்டின் அதிபர் விரும்புவதாலேயே மாநிலத்தின் பெயரை மாற்றிவிட முடியுமா? நியூ மெக்சிகோவின் பெயர் அந்த மாநிலத்தின் அரசியலமைப்புடன் தொடர்புடையது. எனவே, பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கு மாநில அளவிலான சட்ட நடவடிக்கைகளும் காங்கிரஸின் ஒப்புதலும் தேவைப்படலாம். அதிபரின் அறிவிப்பு மட்டுமே பெயர் மாற்றத்துக்குப் போதுமானதல்ல.

இந்த யோசனைக்கு நியூ மெக்சிகோவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பெயர் அதன் வரலாற்றுடனும் கலாசார அடையாளத்துடனும் தொடர்புடையது என்பதால், அதை மாற்றுவது எளிதான முடிவாக இருக்காது.ஒரு பெயர் என்பது வெறும் அடையாளச் சொல் மட்டுமல்ல. அது ஒரு பகுதியின் கடந்தகாலம், மக்களின் வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றையும் பிரதிபலிக்கிறது. எனவே, பெயர் மாற்றம் குறித்த விவாதங்களில் மக்களின் கருத்துகளுக்கும் வரலாற்று உண்மைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

பெயருக்கு பின்னால் ஒரு வரலாறு:

நியூ மெக்சிகோ என்ற பெயரை கேட்டவுடன் அது மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதி என்று சிலர் நினைக்கலாம்.. ஆனால் நியூ மெக்சிகோ அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்றாகும்.. கலாச்சாரத்தின் தாக்கம் இம்மாநிலத்தில் இன்றளவும் காணப்படுகிறது.

அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்ட கட்டடக்கலை,உணவு வகைகள்,கலை மரபுகள் ஆகியவை இதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது..நியூ மெக்சிகோவின் வரலாறு ஐரோப்பியர்கள் அங்கு குடியேறிய காலத்துடன் மட்டுமே தொடங்குவதில்லை.

அப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த பூர்வகுடி மக்களின் பாரம்பரியமும் அதன் அடையாளத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் மொழி,கலை, பழக்கவழக்கங்கள் ஆகியவை மாநிலத்தின் பண்பாட்டுச் செழுமைக்குச் சான்றுகளாக உள்ளன.

Source link