தனுஷ் நடிக்கும் மாரி 3 அதிகாரப்பூர்வ அப்டேட்.!

மாரி திரைப்படத்தின் 2 பாகங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது 3-வது பாகம் உருவாக்கப்பட உள்ளது. மாரி திரைப்படத்தின் முதல் பாகத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘டானு டானு’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவியுடன் தனுஷ் நடனமாடிய ‘ரௌடி பேபி’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. 2-ம் பாகத்தில் கதாநாயகி இறந்து விடுவார். மாரிக்கு காளி என்ற ஒரு மகன் இருப்பார்.

காளி தடகளப் போட்டியில் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனால் மாரி திரைப்டத்தின் 3-ம் பாகத்தில் தனுஷ் காளி கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் தந்தை, மகன் என இரட்டை வேடத்திலும் தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளது. படத்தின் ஒன்லைன் தெரிந்த பிறகே, தனுஷின் ரோல் குறித்து தெரிய வரும்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப் போகிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களாக இணையத்தை ஆக்கிரமித்தது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வேலைகளில் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தனுஷ். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ், இதுவரை 50 படங்களுக்கும் மேல் நடித்து விட்டார். சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Source link