தமிழகத்திற்கு தவிர்க்க முடியாத தலைவர்; சீமானை பற்றி பேசினால் நடவடிக்கை இல்லையா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நாளை (ஜூலை 29) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி, தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

விசாரணையின் போது நீதிபதி, முதலமைச்சர் பற்றிப் பேசினார் என்பதற்காக திமுக எம்.எல்.ஏ.வை உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறை, சீமான் விவகாரத்தில் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். தேர்தலில் வெற்றியோ தோல்வியோ, சீமான் தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராகத்தான் உள்ளார் என்று நீதிபதி விக்டோரியா கவுரி குறிப்பிட்டார்.

சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சித் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், அவர்கள் வெளியிட்ட அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நாளை (ஜூலை 29) காவல்துறை உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.

Source link