தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 16,199 இடங்கள்; 72,627 பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மொத்தம் 16,199 இடங்களே உள்ள நிலையில் 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 2026-27ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூலை 23ம் தேதி வரை பெறப்பட்டது. இதையடுத்து, 70,485 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

அதன் பின்னர், ஜூலை 26 முதல் ஜூலை 27 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட, மேலும் 2142 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து, ஒட்டு மொத்தமாக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது 72,627 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில், மருத்துவம் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேர தமிழகத்தில் இருந்து நீட் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையானது 61,306 ஆக இருக்கிறது. 16,199 இடங்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடக்க உள்ளது.

இம்முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை விட மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link