தமிழகத்தில் காலூன்றும் என்.ஆர்.காங்கிரஸ்: ரங்கசாமி உடன் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் சந்திப்பு

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுச்சேரியின் முதலமைச்சராக ரங்கசாமி பதவி வகித்து
வந்தார். ஆனால், 2008-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.களுக்கும், ரங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் உட்கட்சி மோதல்களும் உச்சக்கட்டத்தை அடைந்தன.

3 இந்திய வம்சாவளி எம்.பி -க்கள்; 1 தமிழ் எம்.பி… பிரிட்டன் அரசியலில் வலுக்கும் தெற்கு ஆசியர்களின் குரல்

இதன் காரணமாக, மேலிட உத்தரவின் பேரில் 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை இழந்த பிறகும் ரங்கசாமிக்கு மக்கள் மத்தியிலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெருமளவில் ஆதரவு இருந்தது. காங்கிரஸ் மேலிடத்தின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த அவர், தனிப்பாதை அமைக்கத் தீர்மானித்தார்.

அதன்படி, 2011-ம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று, புதுச்சேரியில் ‘அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை முறைப்படி தொடங்கினார். என்.ஆர். என்பது அவரது பெயரைக் குறிப்பதுடன் (என்.ரங்கசாமி), “நமது ராஜ்ஜியம் என்பதன் சுருக்கமாகவும் அறிவிக்கப்பட்டது. இக்கட்சிக்கு  “ஜக்கு” சின்னம் ஒதுக்கப்பட்டது. கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே புதுச்சேரி சட்டசபை தேர்தல் வந்தது. 

தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து களமிறங்கிய என்.ஆர்.காங்கிரஸ், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்தது. பின்னர் அ.தி.மு.க.வை விட்டு, சுயேச்சை வேட்பாளர் ஆதரவோடு, கட்சித் தொடங்கிய மூன்று மாதங்களுக்குள்ளேயே  ஆட்சி அமைத்து, என்.ரங்கசாமி
மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 

அதன் பின்னர் 2021 மற்றும் 2026 தேர்தலில் பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்துள்ளார். முன்னதாக கடந்த 2025-ம்
ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க  
விழாவில், தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் விரிவுப்படுத்தப்படும் என என்.ரங்கசாமி அறிவித்தார். அதாவது, பெருந்தலைவர் காமராஜரின் நல்லாட்சி மற்றும் சிந்தனைகளை தமிழகத்திலும் கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மையான நோக்கம் என்றும், 2026 சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

ஆனால், அவர் சொன்னபடி  தமிழகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் தற்போது  என்.ஆர்.காங்கிரஸ்  தமிழகத்தில் காலூன்ற இருக்கிறது. 
இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு
பகுதியாக, தமிழகத்தில் பல்வேறு கட்சிகளில் பிரபலமாக இருக்கும் முக்கிய நிர்வாகிகளை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்க்கும் பணிகள்
நடந்து வருகின்றன. 

முன்னாள் எம்.எல்.ஏ. அருள் சந்திப்பு

பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் அணியில் அதிருப்தியாக இருக்கும் சேலத்தை
சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அருள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் ரங்கசாமியை தனியார் ஓட்டலில் சந்தித்து பேசினர்.  புதுச்சேரியில் ஆலோசனை கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்வதை அருள் உறுதி செய்துள்ளார்.

ஆகஸ்டு முதல் வாரத்தில் சென்னையில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அறிமுக விழா, நிர்வாகிகள் இணைப்பு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் என முப்பெரும் விழாவாக நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவராக அருள் அறிவிக்கப்பட இருக்கிறார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் பொறுப்பு தலைவராக இருப்பார் என்று தெரிகிறது.

பாபு ராஜேந்திரன் 

Source link