சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், 35 இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது’ என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை:
* கனமழை காரணமாக, 173 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன
* மலைப்பகுதிகளில், 35 இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது
* நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தமிழக பேரிடர் மேலாண்மை படையின் இரண்டு அணிகள், தேசிய பேரிடர் மேலாண்மை படையின் இரண்டு அணிகள் அனுப்பப்பட்டுள்ளன
* ஊட்டி, நீலகிரி, கொடைக்கானல் போன்ற இடங்களில், நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளது
* திண்டுக்கல், கொல்லிமலை, நாமக்கல், கல்வராயன் மலை, கள்ளக்குறிச்சி, ஏலகிரி மலை, திருப்பத்துார், ஏற்காடு மலைகள், சேலம், திருவண்ணாமலை, வால்பாறை மலைகள், கோவை ஆகிய இடங்களில், மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
