நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து ஒரு வழியாக இன்று (23.07.2026) வெளியாகிள்ளது. முதல்வராக முதல் படம், அதே சமயம் சினிமாவில் அவரது கடைசி படம் என்ற சூழ்நிலையில் வெளியாகியுள்ளதால் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அமைச்சர் ஆனந்த் திருவிழா போல் பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்பதால் பேனர், போஸ்டர், கொடி எனத் திரையரங்கை ரசிகர்களும் நிர்வாகிகளும் அலங்கரித்துள்ளனர். முன்னதாக முதல்வர் விஜய்யின் ரசிகள்ர் கோவிலுக்கு சென்று பூஜையும் செய்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை சென்னை அடையாறு தாகூர் திரைப்பட கல்லூரியில் முதல்வர் விஜய் நேற்று (22.07.2026) இரவு கண்டுகளித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 09.00 மணியளவில் பெரும்பாலான திரையரங்குகளில் தொடங்கியுள்ளது. முன்னதாக கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய்” என்ற டைட்டில் கார்டுடன் ஜனநாயகன் அதிகாலை 6:00 மணிக்கே வெளியானது குறிப்பிடத்தக்கது.
