தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடை திறப்பா? அமைச்சர் விக்னேஷ் கூறுவது இதுதான்!

திண்டுக்கல்: ‘தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கும் விவகாரத்தில் அரசு சரியான முடிவை எடுக்கும்’ என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது; ஏற்கனவே கள்ளுக்கடை திறந்தால், என்னென்ன சாதகம், பாதகம் இருக்கிறது என்பது குறித்து அறிக்கையை முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். இப்போது, கள்ளுக்கடைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். கேரளா செல்லும் சாலைகளில் நிறைய கள்ளச்சாராயங்கள் பிடிபட்டு வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி விசாரிக்கும் போது, அது கள்ளுக்கடைகளுக்கும் போவதாக தகவல் வருகிறது. அதனால், கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் சரியான முடிவை அரசு எடுக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

Source link