காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
ராகுல் காந்தி தமிழ்நாடு வருகை
இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸிற்கு தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்கு பிறகு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது இந்த நிலையில் அந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
திமுக, அதிமுக போட்ட வியூக கணக்கு Explained by TOI reporter Ram sundaram
ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்க்கொள்ள இருக்கும் இடங்கள் விவரம்:
- பொன்னேரி
- சோளிங்கர்
- குளிச்சல்
- நாகர்கோவில்
- ஸ்ரீ வைகுண்டம்
- துறையூர்
ஆகிய பகுதிகளில் நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமான மூலம் சென்னைக்கு வரும் ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக பொன்னேரிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
20,000 பேர் அமரக்கூடிய வகையில் பெரிய பொதுக்கூட்ட மேடை
மேலும் பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20,000 பேர் அமரக்கூடிய வகையில் பெரிய பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 12 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு வரவுள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் துரை சந்திரசேகருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் ஒன்றரை மணி அளவில் சோளிங்க தொகுதிக்கு உட்பட்ட பாண்டியநல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் பைபாஸ் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.இந்த பரப்புரையை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் ராகுல் காந்தி வரும் 20-ம் தேதி ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகைதரவுள்ளார்.
ராகுல் காந்தி மற்றும் முதல்வர் ஸ்டாலின் கூட்டு பிரச்சாரத்திற்கு வாய்ப்பு ?
ராகுல் காந்தியின் முதல்வர் ஸ்டாலினும் ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்வார்களா என்று கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ராகுல் காந்தி ஒரு பக்கம் பிரச்சாரம் செய்கிறார். முதல்வர் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்கிறார். இருவரும் ஒன்றாக பிரச்சாரம் செய்ய நேரமில்லை. தற்போது முதல்வர் பயணத்திட்டத்தை மாற்றினால் 40 தொகுதிகளில் பிரச்சாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அதன் காரணமாக இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு இல்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் வருகையையொட்டி பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
