இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வௌியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாகவது:-

ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற முழக்கங்களால் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க பாஜக முயற்சிக்கிறது.

மாநில உரிமைகளைப் பறித்து சர்வாதிகார ஆட்சியை நிறுவ வேண்டும் என பாஜக இலக்கு வைத்துள்ளது.

தமிழ் கலாச்சாரத்திற்கும் பாஜகவின் பாசிசத்திற்கும் இடையிலான போராட்டத்தில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link