“தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆள நினைக்கும் பாஜக முயற்சி ஒருபோதும் பலிக்காது”

பொன்னேரி: “முற்காலங்களில் ராணுவம் மூலம் போர் தொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பாஜக ராணுவம் இல்லாமல் போரை தொடுக்கிறது. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்றை அவர்கள் அழிக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது” என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைத்து, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதித்திட்டம் தீட்டியது. அதை நாம் போராடி முறியடித்தோம்.

நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் குரலை நசுக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜக, டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆளப் பார்க்கிறது. அரசியலமைப்பை பலவீனப்படுத்த அவர்கள் திட்டமிட்டனர். தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்றை அழிக்க நினைக்கிறது பாஜக . நாங்கள் எப்போதும் அதை அனுமதிக்க மாட்டோம்.

Source link