தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் (அக்டோபர் 22) மழை நீடிக்கும் என்பதால், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, குமரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று காலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாடு பிரதானமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பிற தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும்.
மேற்கு தமிழ்நாட்டில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்டோபர் 23) அரபிக்கடலை நோக்கி நகர்வதால் திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் உள் மாவட்டங்கள் முதல் கடலோரப் பகுதிகள் வரை, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
South and West Tamil Nadu are likely to be the major hotspots, with heavy to very heavy rainfall expected in several districts. ====================== South Tamil Nadu – Major Hotspots ————— With the low-pressure area lying over the Gulf of Mannar, Kanyakumari, Thoothukudi, Tirunelveli and Tenkasi districts are likely to witness heavy to very heavy rainfall. Other southern districts, including Virudhunagar, Madurai, Ramanathapuram and Theni, can also expect good rainfall. Western Tamil Nadu —————– Dindigul, Coimbatore, Tiruppur, the Nilgiris, Karur and adjoining districts may also receive good rainfall as the system moves towards the Arabian Sea tomorrow. Across Tamil Nadu all districts ————————- From the interior districts to the coastal belt, rainfall is expected across much of the state. The interiors are also likely to get their share of rains. Chennai and Surrounding Areas – Day rains possible from today ——————– As seen in the image, when a low-pressure area lies over the Gulf of Mannar, it can pull easterly winds and rain-bearing clouds well into the interior regions. Not only Chennai, Vellore, Ranipet and the catchment areas can also receive rainfall. Even during the daytime, sudden, short-duration intense spells are possible in Chennai. Watchout for Coonoor, Majolai belt for extreme rains.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 21, 2026
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் பகல் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் போது, அது கிழக்கு திசைக் காற்றையும் மழை மேகங்களையும் உள் மாவட்டங்களை நோக்கி ஈர்க்கும். இதனால் சென்னை மட்டுமல்லாது வேலூர், ராணிப்பேட்டை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் பகல் நேரத்திலும் கூட, குறுகிய நேரத்தில் திடீர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.குன்னூர், மாஞ்சோலை பகுதிகளில் மிகக் கடுமையான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.
October 23-25 – Seesaw effect, Interior Tamil Nadu including Northern districts will join the rain party. KTCC (Chennai) falls perfectly in middle of the seesaw game played by systems on both Arabian Sea and Bay of Bengal. Overall next 3 days looks damn good for overall Tamil Nadu, while Chennai as usual will get more than its share. Please refer October 22nd forecast in earlier post -https://t.co/URxQHwpjAq
— Tamil Nadu Weatherman (@praddy06) October 21, 2026
தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், அக்டோபர் 23-25 – ஊஞ்சல் போன்ற மாறும் நிலை (Seesaw effect), வட மாவட்டங்கள் உட்பட உள் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் இயங்கும் வானிலை அமைப்புகளுக்கு இடையிலான இந்த ஊஞ்சல் விளையாட்டின் சரியான மையப்பகுதியில் கே.டி.சி.சி (KTCC – சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்) பகுதி அமைந்துள்ளது.
Chennai Water Supply Lakes as on 22.10.2026 – Good inflow continues in to Puzhal while good rains in Poondi and Thervoy Kandigai. Today more rains expected in Lake Catchment areas. Please see Today Oct 22 Forecast posted earlier – https://t.co/kI11zX0vEl Seesaw effect on Oct 23-25 – https://t.co/2izF8TXRnq
— Tamil Nadu Weatherman (@praddy06) October 22, 2026
ஒட்டுமொத்தமாக அடுத்த 3 நாட்கள் தமிழ்நாடு முழுவதற்கும் மிகச் சிறப்பான மழை இருக்கும், அதேவேளையில் சென்னை வழக்கம்போல் தன் வழக்கமான பங்கை விடக் கூடுதலான மழையைப் பெறும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை நீர் வழங்கள் ஏரிகளின் நிலை (22.10.2026 நிலவரப்படி) குறித்து வெளியிட்டுள்ள பதிவில், புழல் ஏரிக்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ளது; பூண்டி மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கூடுதல் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.
