தமிழக வீரர் சாம்ராஜ் சாதனை * தேசிய யூத் தடகளத்தில்

லுாதியானா: யூத் தடகளம் 100 மீ., ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தார் தமிழகத்தில் நீல் சாம்ராஜ்.

பஞ்சாப், லுாதியானாவில் 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் (18 வயதுக்கு உட்பட்டோர்) நேற்று துவங்கியது. மூன்று நாள் நடக்கும் இத்தொடரில் தமிழகம் சார்பில் 21 வீரர்கள், 16 வீராங்கனைகள் என 37 பேர் பங்கேற்கின்றனர்.

நேற்று நடந்த 100 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் சாம்ராஜ் (10.46 வினாடி) தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது யூத் தடகளத்தில் புதிய தேசிய சாதனையாக அமைந்தது. முன்னதாக 2023ல் அன்ஷு ராஜக் 10.63 வினாடி நேரத்தில் கடந்து இருந்தார்.

பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் மிர்த்திகா (11.78 வினாடி) தங்கம் கைப்பற்றினார். இது யூத் தடகள தொடர் சாதனை ஆனது. பெண்களுக்கான 400 மீ., அரையிறுதி 1ல் தமிழகத்தின் சகாய ஜெமிமா (55.94) மூன்றாவது இடம் பெற்றார்.

Source link