தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாரப்புரம் இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு…அக். 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை. திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சார்பில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியாகின.
