40 ஆண்டுகள் கடந்திருந்தாலும், கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்குபு கிடைத்து வரும் நிலையில், படத்தின் இயக்குனர் கங்கை அமரன் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ராமராஜன் – கனகா நடிப்பில் வெளியாகி 40 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்றைக்கும் வரவேற்பை பெறும் அளவுக்கு இருக்கும் கரகாட்டக்காரன் தான் அந்த படம். தமிழ் சினிமாவில் எவர் கிரீன் காமெடி காட்சிகள் நிறைந்த திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கவுண்டமணி – செந்தில் கூட்டணி இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி காட்சிகளை வொர்க்அவுட் செய்திருப்பார்கள். கரகாட்டக்காரன் 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம். ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார்.
2 கரகாட்ட கோஷ்டிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து காமெடியாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த, இந்த படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. படத்தில் கவுண்டமணி செந்தில் இடையேயான இன்றுவரை பேசப்படக்கூடிய காமெடி காட்சிகளை கொடுத்துள்ளார். இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் எழுதி இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
பல ஆண்டுகள் கடந்து இருந்தாலும், ராமராஜன் – கனகா ஜோடி, கவுண்டமணி – செந்தில் காமெடி காம்போ இன்றைக்கும் கரகாட்டக்காரன் படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச வைத்துள்ளர். இது குறித்து ராமராஜன் – கங்கை அமரன் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இந்த படத்திற்காக ராமராஜன் – கனகா இருவரும் இடைவிடாமல் தலையில் கரகத்தை வைத்து ஆடிக்கொண்டு நடித்தார்கள். பகல் இரவு என மாறி மாறி படப்பிடிப்பை நடத்தினோம்.
ஒருநாள் பகலில் கரகம் தலையில் வைத்து ஆடி படப்பிடிப்பை நடத்திவிட்டு, இரவில், ராதா அம்பிகா கார்டனில் சாமி பாடல் காட்சி ஷூட் செய்ய வேண்டும். அப்போது என்னிடம் வந்த ராமராஜன் தலையில் கரகம் வைத்து ஆடி, ரொம்ப வலிக்கிறது. இந்த பாடல் காட்சியில் கரகம் இல்லாமல் எடுக்கலாமே என்று கேட்டார். அதை கேட்டு நான் அது எப்படி முடியும்? முடியவே முடியாது என்று சொல்ல, கவுண்டமணி இவர்களுக்கு சப்போர்ட்டாக வந்துவிட்டார்.
அவரும் என்னிடம் வந்து, இருவரும் தலை வலிக்கிறது என்று சொல்கிறார்கள். கரகம் இல்லாமல் இந்த காட்சியை எடுக்கலாம் என்று சொன்னார். நான் முடியவே முடியாது என்று சொல்லியும் எப்படியோ சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அப்படி செய்ததது தான் அந்த படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இந்த பாடலில் இறுதி காட்சியில் கரகத்தை எடுப்பார்கள். அந்த காட்சிக்கு பின்னணி இசை என்னை அறியாமல் சரியாக அமைந்துவிட்டது என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
